ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.










