13 குறித்த ஜனாதிபதியின் உத்தரவு மக்களை ஏமாற்றும் தந்திரம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உறுதிமொழி மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தினார்.

எரியும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இந்த உரையாடலை ஆரம்பித்தார்.

எனவே, அவரின் இனவாதச் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றார். தற்போது தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. தேர்தலை நிறுத்தினால் பண விரயமே ஏற்படும்” – என்றார்.

Related Articles

Latest Articles