13 மில்லியன் ஸ்புட்னிக், 5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ஏற்பாடு

நாட்டில் கொவிட் – 19 தடுப்பூசியை பெறுவதற்கு ஏற்புடைய அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் – என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா   தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டவர்களுக்கு, 2ஆவது டோஸை வழங்கவேண்டியுள்ளது. அதற்கு தேவையான தடுப்பூசியை பிரிதொரு நாட்டிலிருந்து வாங்குவதற்கான இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. லலித் வீரதுங்க தலைமையிலான குழுவினர் இவ்விவகாரத்தைக் கையாள்கின்றனர்.

அத்துடன், 13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளன. இன்னும் ஒரிரு நாட்களில் 6 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.

அதேபோல் ஜுன் மாத இறுதியில் அல்லது ஜுலை மாத ஆரம்பத்தில் 9 லட்சம் பைசர் என்ற தடுப்பூசிகள் கொண்டுவரப்படும். இத்தடுப்பூசியை ஒரு தடவை மட்டும் செலுத்தினால் போதுமானதாக இருக்கும். இத்தடுப்பூசி வர்க்கத்திலும் 5 மில்லியன்வரை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டிய அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles