16 வயது பாடசாலை மாணவன் மாயம்

கொட்டாவ பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த 7 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவர் கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் தமது இரண்டு சிறுவர்களுடன் மஹல்வராவ பகுதியிலுள்ள தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் கொட்டாவ நகருக்கு திரும்பி, பஸ்ஸில் மாகும்புர பகுதிக்கு செல்லும் சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பின்னர் அவர் பஸ்ஸில் கொட்டாவ பக்கம் மீள திரும்பியுள்ளார். எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இந்தநிலையில் குறித்த சிறுவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொட்டாவ பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles