16 வயது சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெசாக் தினத்திற்கு அடுத்த நாள் களுத்துறை தெற்கு, காலி வீதியிலுள்ள விடுதியொன்றின் பின்புறமுள்ள ரயில் கடவைக்கு அருகிலிருந்து குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சிறுமி, பெண்ணொருவர் மற்றும் இரு ஆண்கள் கடந்த 06ஆம் திகதி மாலை குறித்த ஹோட்டலில் இரு அறைகளில் தங்கியிருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தம்பதியினரும் சிறுமியுடன் வந்த இளைஞரும் சில மணித்தியாலங்களுக்கு பின்னர் ஹோட்டலில் இருந்து வௌியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரயில் கடவைக்கு அருகிலிருந்து சிறுமியின் நிர்வாண சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
