1,600 போதை மாத்திரைகளுடன் கம்பளையில் வைத்தியர் கைது!

ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கம்பளை, எக்கால பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராதனை வைத்தியசாலையில் சேவையாற்றும் 49 வயதான வைத்தியர் ஒருவரே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராதனை பகுதியில் இருந்து, கம்பளை ,ஜயமாலபுர பகுதிக்கு போதை மாத்திரைகளை எடுத்துவந்த வேளையிலேயே, எக்கால பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க கெக்குலாந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வசம் இருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன, வைத்தியருக்குரிய அடையாள சின்னத்துடன் அவர் பயணித்த வாகனமும் பொலிஸார் வசம் உள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles