உலகக்கிண்ண தொடர்களில் 18 கோல்கள்: மெஸ்ஸி சாதனை

ஆஸ்திரியாவுக்கு எதிரான லீக் போட்டியில் , அர்ஜென்டினா அணியின் தொடக்க கோலை அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

6 உலகக் கோப்பை தொடர்களில் அவரது இதுவரை அவர் 18 கோல்களை அடித்துள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது குரூப் போட்டியில், ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோல் மூலம் அவர் இந்த வரலாற்றுப் பட்டியலின் முதலிடத்தைப் பிடித்தார்.

அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, கூடுதல் நேரத்தில் (stoppage time) அவர் அடித்த மற்றொரு கோலின் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவினருக்குமான FIFA உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன் 17 கோல்களுடன் முதலிடத்தில் இருந்த பிரேசிலின் வீராங்கனை மார்த்தாவின் (Marta) சாதனையை மெஸ்ஸி முறியடித்தார்.

கடந்த வாரம் வட அமெரிக்காவில் தொடங்கிய இந்த உலகக் கோப்பை தொடரின் அர்ஜென்டினாவின் முதல் போட்டியில், அல்ஜீரியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றபோது மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார்.

அதன்மூலம் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (Miroslav Klose) 16 உலகக் கோப்பை கோல்கள் என்ற சாதனையை அவர் சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

38 வயதான மெஸ்ஸி, இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார்.

2006-ல் தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய மெஸ்ஸிக்கு இது 6-வது உலகக் கோப்பை தொடராகும். தற்போது அவர் தனது நாட்டுக்காக 201 போட்டிகளில் விளையாடி 121 கோல்களை அடித்துள்ளார்.

தொடர்ச்சியாக ஆறு உலகக் கோப்பை தொடர்களில் தனது நாட்டுக்காக கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறலாம். மேலும், திங்கட்கிழமை நடக்கும் மற்றொரு போட்டியில் அல்ஜீரியாவை ஜோர்டான் அணி தோற்கடிக்கத் தவறினால், அர்ஜென்டினா குரூப் ‘ஜே’ பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பது உறுதியாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles