19 வயது யுவதியுடன் காதல் – 54 வயது நபர் அடித்துக்கொலை – யாழில் பயங்கரம்!

யாழ்.நிருபர்

யாழ்ப்பாணத்தில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் 6 பேரைச் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியைச் சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி இருந்தார்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால் இருவரும் ஊர் திரும்பியுள்ளனர்.

அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை 6 பேரைக் கைது செய்த சுன்னாகம் பொலிஸார், சந்தேகநபர்களைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles