2 ஆயிரம் கோடி ரூபாவா? இது பெறுமதியற்ற இரத்தினக்கல் – வர்த்தகர்களின் கருத்தால் சர்ச்சை

இரத்திபுரியில் அண்மையில் 510 கிலோ எடையுடைய பாரியதொரு இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் இதுவே மிகப்பெரிய இரத்தினக்கல் எனவும், அதன் பெறுமதி 2 ஆயிரம் கோடி ரூபா எனவும் கூறப்பட்டது.

இது விலைமதிப்பற்ற இரத்தினக்கல்தான் என்பதை மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையும் ஏற்றுக்கொண்டிருந்தது.

ஆனால் குறித்த இரத்தினக்கல் மதிப்பற்றதெனவும், அருங்காட்சியகத்துக்கு (மியூசியம்) வேண்டுமானால் 10 லட்சம் ரூபாவுக்கு வழங்கலாம் என இரத்தினக்கல் வியாபாரிகள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

” நான் 40 வருடங்களாக இரத்தினக்கல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றேன். இது மாபளொன்று. இதனை வைத்து இலங்கையின் பெயரை அவமதிக்கின்றனர். சுமார் 3 அல்லது நான்கு லட்சம் ரூபா பெறும்.” – என்று நந்தன என்ற இரத்தினக்கல் வர்த்தகர் கருத்து வெளியிட்டார்.

Related Articles

Latest Articles