13,392 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி! 2.34 சதவீதமானோர் 9 W!!
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு பாடசாலை விண்ணப்பதாரிகள், தனியார் விண்ணப்பதாரிகள் என மொத்தமாக 4 லட்சத்து 74 ஆயிரத்து 147 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 152 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.
உயர்தரம் கற்பதற்கு 2 லட்சத்து 37 ஆயிரத்து 26 பேர் தகுதிபெற்றுள்ளனர். இது 73.45 சதவீதமாகும்.
2.34 சதவீதமானோர் 9 W
13 ஆயிரத்து 392 பேர் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். இது 4.15 சதவீதமாகும்.
2.34 சதவீத மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஜுலை 14 முதல் 28 ஆம் திகதிவரை ஒன்லைன்மூலம் விண்ணப்பிக்க முடியும்.
-பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கூறப்பட்ட தகவல்களின் சுருக்கம்.-
ஆர்.சனத்