2 ரூபாவால் வந்தவினை – பஸ் நடத்துனர்மீது பயணி தாக்குதல்!

பஸ் கட்டணத்தில் எஞ்சிய இரண்டு ரூபாவை வழங்காத பஸ் நடத்துநர் மீது பயணியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதல் நடத்திய காலி தடல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணி காலியிலிருந்து அம்பலாங்கொடை நோக்கிச் செல்லும் இ.போ.ச பஸ்ஸில் காலி பஸ் நிலையத்தில் ஏறி தடல்ல என்ற இடத்துக்கு பஸ் டிக்கெட் தரும்படி கூறி 50 ரூபாவை வழங்கியுள்ளார்.

நடத்துனர் காலியிலிருந்து 23 ரூபா பஸ் டிக்கட்டை வழங்கி மிகுதியாக 25 ரூபாவை வழங்கியுள்ளார். இரண்டு ரூபாய் மிச்சக் காசு இல்லை என நடத்துனர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பஸ் வண்டியின் படியில் நின்ற அந்தப் பயணி நடத்துனரை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டாம் என சக பயணிகள் தெரிவித்ததை அடுத்து அந்த நபர் பஸ் வண்டிக்குள் புகுந்து நடத்துனரை தாக்கிக் காயப்படுத்தி உள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளை வேறொரு பஸ் வண்டியில் ஏற்றிவிட்டு பஸ் வண்டியை பொலிஸ் நிலையத்துக்கு திருப்பிக்கொண்டு வந்து முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles