2022 மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 15 ஆம் திகதி வரையான காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆட்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசரான ஜனாதிபதி சட்டத்தரணி பி.பீ. அலுவிஹாரே குறித்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, மேலதிக பிரதம மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ். வசந்த குமார ஆகியோரும் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனேக ஹேரத் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.











