2024 இல் கொழும்பில் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பு! மலையக வீட்டு திட்டமும் ஆரம்பம்!!

2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கட்டப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக 11 வீட்டுத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 06 வீடமைப்புத் திட்டங்கள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக 552 மில்லியன் சீன யுவான் (இலங்கை மதிப்பில் 22 பில்லியன் ரூபாய்) உதவியாகப் பெறப்படும்.

கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1996 ஆகும். இதன் நிர்மாணப் பணிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எஞ்சிய 4,500 வீடுகள் அப்பிள் வத்த கொழம்பகே மாவத்தை, பெர்கியூசன் வீதி, ஸ்டேடியம் கம, ஒபேசேகரபுர மற்றும் மாதம்பிட்டிய ஆகிய இடங்களில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 15,728 மில்லியன் ரூபாவாகும்.

இந்த திட்டம் கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நகர மறுமலர்ச்சித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக இந்த உதவித் திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிதியுதவியின் கீழ் செயல்படுகிறது.

கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 23 ஆகும். வீடுகளின் எண்ணிக்கை 14,611 ஆகும். 11,269 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு நகரின் 116 ஏக்கர் மீள் அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்துள்ளது. அதற்கான புதிய முதலீட்டு திட்டங்கள் கண்டறியப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன தெரிவித்தார்.

மேலும் 3,500 வீடுகள் நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும். நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்காக கட்டப்படும் இந்த வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 11 ஆகும். இந்த 11 வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அவற்றில் சில தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்த ஆண்டில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள 10 ஆயிரம் இந்திய வீட்டு திட்ட பணிகளும் ஆரம்பமாகவுள்ளன. தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஊடாக இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles