22 ஆம் திகதி பாராளுமன்றம் செல்கிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.

ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் எம்.பியான ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ரணிலின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் ஐ.தே.க. நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அதன்பின்னர் அப்பெயர் வர்த்தமானியில் வெளியாகும்.

ஜுன் 22 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூடும் பட்சத்தில் அன்றைய தினம் ரணில் சத்தியப்பிரமாணம் செய்வார்.

Paid Ad
Previous articleஜப்பானிடமிருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் – பச்சைக்கொடி காட்டிய தூதுவர்
Next articleநாளொன்றில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவு