“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என்பன நீதித்துறையின் சுயாதீனத்தையே பிரதானமான விடயமாகக் கருதுவார்கள்.
நீதித்துறையின் சுயாதீனம் குறித்துச் சந்தேகம் எழுந்தால், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு வராது. இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும்.
எனவே, 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்பட்டால், அது வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார் ஜி.எல்.பீரிஸ் .










