3 கோடி ரூபா பெறுமதியான தொல்பொருட்களை தம்வசம் வைத்திருந்த மூவர் கைது

புதையலில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபா பெறுமதியான தொல்பொருட்களை தம்வசம் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உட்பட மூவரை பாணந்துறை மத்திய தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் களுத்துறையில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மொரகாஹகந்த, கந்தர மற்றும் களுமோதர பகுதிகளைச் சேர்ந்த 34 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

Related Articles

Latest Articles