3 தசாப்தங்களுக்கு பிறகு தலதா மாளிகையில் குடியரசுப் பெரஹரா

கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுப் பெரஹரா இடம்பெறவுள்ளது.

ஐந்தாவது முறையாக நடைபெறும் இக்குடியரசு பெரஹரா வீதிஉலா, எதிர்வரும் (19) கண்டி நகரில்வரவிருக்கிறது. 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளன.

எதிர்வரும் (19) மாலை 6.30 மணிக்கு கண்டி மங்களகூடத்திலிருந்து ஆரம்பிக்கும் பெரஹரா, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும் தலதாமாளிகையை வந்தடையும்.

தலதா மாளிகை இணைப்பாளர் மற்றம் கலாசார அதிகாரி ஜெயம்பதி வெத்தகல இதுபற்றித் தெரிவித்தார்.

வருடாந்த எசல பெரஹெர போன்று யானைகள் மற்றும் நடனக் குழுக்களால் இந்த குடியரசு பெரஹராவை வண்ணமயமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜயம்பதி வெத்தகல மேலும் தெரிவித்தார்.

ஆனால், இந்த பெரஹராவிற்கு புனிததந்தம் கொண்டுவரப்பட மாட்டாது. மாறாக குடியரசுச் சின்னம் மாத்திரம் வீதி உலா வரவுள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இம்முறை பெரஹரா ஏற்பாடு செய்யப்படுவதுடன், பெரஹராவை காணவரும் மக்களுக்காக கண்டி பெரஹரா வீதியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் மிகவும் விசேடமான மற்றும் முக்கியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ தலதா மாளிகையினால் இவ்வாறான விசேட பெரஹராகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பெரஹரா 1875 இல் நடைபெற்றது, மேலும் இது விக்டோரியா மகாராணியின் மகன் வேல்ஸ் பிரபு இலங்கைக்கு வருகை தந்ததை முன்னிட்டு நடத்தப்பட்டது.

1954 ஆம் ஆண்டு இலங்கையின் அரச தலைவரான இரண்டாம் எலிசபெத் மகாராணி இலங்கைக்கு வருகை தந்த பின்னர் இரண்டாவது பெரஹரா நடத்தப்பட்டது. அதனை எண்கோண மண்டபத்திலிருந்து (பத்திரிப்புவ) எலிசபெத் மகாராணி கண்டுகளித்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது பெரஹரா 1981 இல் நடைபெற்றதோடு அதைக் காண இரண்டாவது எலிசபெத் மகாராணி வருகை தந்திருந்தார். மகா மண்டபத்தில் (மஹமலுவ) அமைக்கப்பட்ட விசேட மேடையிலிருந்து அவர் பெரஹராவை பார்வையிட்டார்.

1987 ஆம் ஆண்டு நான்காவது குடியரசு பெரஹரா இலங்கையின் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவினால் நடத்தப்பட்டது. இவ்வருடம் ஐந்தாவது குடியரவு பெரஹரா நடைபெறுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles