30ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு: அரசுக்கு ஆசி வேண்டி தேங்காய் உடைத்து பிரார்த்தனை

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக சில அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எவ்வித ஆதரவும் வழங்கப்போவதில்லை என ஹட்டன், போகாவத்த தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (28.11.2026) பணிக்குச் செல்வதற்கு முன்னர் போகாவத்த ஆலயத்தில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள், அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தேங்காய் உடைத்து தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள், தற்போதைய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்துள்ளமை உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டனர்.

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அனைத்து அரச ஊழியர்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும், அதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தாம் எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், எதிர்வரும் 30ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் வழமைபோன்று தேயிலை கொழுந்து பறிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles