ஐக்கிய தேசியக்கட்சியின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்று இம்மாதம் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசுக்கு எதிராகவே இப்போராட்டம் அமையவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அக்கட்சியால் நடத்தப்படும் பிரமாண்டக் கூட்டமாக இது அமையும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
