300 போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!

வவுனியா, கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

300 போதை மாத்திரைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த 41 வயதுடையவர் என்றும், மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles