35 வருட அரச கல்விச் சேவையிலிருந்து திருமதி. கலையரசி ஓய்வு

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்பிரிவில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய திருமதி. கலையரசி யோகநாதன் 2023-02-21 அன்று தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பதுளை கலைமகள் நடராஜன், இராஜாம்பாள் தம்பதிகளின் புதல்வியாவார்.

தனது பள்ளி வாழ்க்கையை பதுளை உர்சலாஸ் நர்சரி பள்ளியில் ஆரம்பித்து, தொடர்ந்து பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திலும், கண்டி மோபிரே மகளிர் கல்லூரியிலும், பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

இவர் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி சிறப்புப் பட்டத்தினையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டத்தினையும், தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முகாமைத்துவ முதுமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருக்கும் இவர் 1987ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியினை ஆரம்பித்தார். 1999ஆம் ஆண்டு கல்வி நிருவாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியெய்தி அச்சேவையில் உள்ளீர்க்கப்பட்டார். ஊவா மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவையின் தமிழ் மொழி மூலமான முதலாவது கல்வி அதிகாரி என்ற பெருமையும் இவரைச் சார்ந்ததாகும். அதனைத் தொடர்ந்து இவர் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உபஅதிபராகவும், பதுளை ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பதுளை வலயக் கல்விப் பணிமனையில் 9 வருடங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக இணைந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து 2015 முதல் 2021 வரையான காலப்பகுதியில் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சின் மேலதிகக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்து பணியாற்றினார்.

இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா கற்கையின் முதன்மை ஆசிரியராகவும் 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றினார். மனிதாபிமானத்துடன் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்ற இவர் பெண் தலைமைத்துவத்திற்கு ஓர் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். மலையக கல்வி வளர்ச்சிக்காக சேவையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள இவரை, தனது ஓய்வு காலத்தில் தன் குடும்பத்தாருடன் சிறப்புடன் வாழ கல்விச் சமூகம் வாழ்த்துகின்றது.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles