உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்களில் சுமார் 37 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 19ஆம் திகதி அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்புகள் அஞ்சல் நிலையத்திற்கு வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
