4 துப்பாக்கிகளுடன் மடுல்சீமையில் ஒருவர் கைது!

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எக்கிரிய தெமோதர கிராமத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, எக்கிரிய தெமோதர கிராமத்திற்கு விரைந்த ம பொலிஸார், சந்தேக நபரின் வயலில் உள்ள குடிசையை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

இதன்போத அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. அத்துடன் 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பசறை நிருபர் – ராமு தனராஜா

Paid Ad