கொழும்பிலிருந்து , பதுளை நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸொன்று,
தியத்தலாவை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (27) அதிகாலை வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்தவுடன் பிரதேச மக்களும், அதிகாரிகளும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
