5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகள் ஒன்றரை மாதத்தில் வெளியீடு!

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒன்றரை மாதத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின்போது எஹெட்டுவௌ பிரதேத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் முகங்கொடுக்க நேர்ந்த அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அதிகாரிகள் குழுவொன்றை அங்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில் இம்முறை 05ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை குறிப்பிடத்தக்க எந்தவித சிக்கல்களுமின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு இடையில் பரீட்சைபெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி குறுகிய காலத்தில் இந்தப் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் ஆராயப்படும்.

அதேவேளை கா.பொ.த. உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23ம் திகதி நடவத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை மே மாதம் நடத்தத்தீர்மானிக்கப்பட்டுள்ள கா.பொ.த. சாதரண தர பரீட்சைக்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles