பண்டாரவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை, ஹப்புத்தளை பிரதான வீதியி, அம்பத்தன்ன வத்த சந்தியில் இன்று மதியம் காரொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வெலிமடை பகுதியில் இருந்து ஹப்புத்தளை நோக்கி வந்த காரே விபத்துக்குள்ளாகியது.
காயமடைந்தவர்களில் 30 வயதான இளைஞர் தியத்தலாவ வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறு காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமு தனராஜா










