5000 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ். குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என்று உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

இதன்போது 5 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles