” மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அதனை எதிர்கொள்வதற்கு தயாராகுங்கள்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.










