கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் 91 வது ஆண்டு நிறைவு விழா!

கண்டி மாவட்டம், கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தனது 91-வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் விசேட நிகழ்வுகளை முன்னெடுத்தது.

1935-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் 91-வது அகவையை முன்னிட்டு, அதிதிகள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சி பரிமாறப்பட்டது.

பாடசாலையின் புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் கௌரவிப்பு நிகழ்வும் இதன்போது மிக விமர்சையாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. எஸ். ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பின்வரும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்:

திரு. எஸ். பரசுராமன்: பிரதம அதிதி – முன்னாள் உப பீடாதிபதி (கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை) மற்றும் ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற விரிவுரையாளர்.

மேலும், இந்நிகழ்வில் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

க. யோகா

Related Articles

Latest Articles