நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்”

“ வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்” எனும் தொனிப்பொருளின்கீழ் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டி காரியாலயத்தின் ஊடாக நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்” எனும் நூலக பகுதி இன்று(29) காலை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா விக்டோரியா பூங்கா வலாகத்தில் இயங்கும் மாநகர சபை பொது நூலகத்தில் ஆரம்பித்து கைக்கப்பட்டுள்ள “இந்தியன் கோர்னர்” நூலக பகுதி ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாநகர சபை ஆணையாளரும், நுவரெலியா மாவட்ட செயலாளருமான சுஜீவா போதிமான்ன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டியில் உள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் துதுவர் வைத்தியர் ஆதிரா கலந்து சிறப்பித்தார்.

ஆ.ரமேஷ், நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles