ஹொலிரூட் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளது.

ஹொலிரூட், 18 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தசுன் லக்மால் (வயது – 24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலாக்கலை பகுதியில் மரணவீடொன்றுக்கு நேற்றிரவு இவர் சென்றுள்ளார் எனவும், அங்கு அவர் அதிகளவு மது அருந்தி இருப்பதை சிலர் கண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். நீதவான் சம்பவ இடத்துக்கு வருகைதந்து மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்.
அதிக மதுபோதையில் இவர் வழுக்கி நீர்த்தேக்கத்தில் விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

ஆ.ரமேஷ் – கௌசல்யா

Related Articles

Latest Articles