“ ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்குவது தொடர்பில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று தெரிவித்தார்.
“ பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது பற்றி தமிழ்க் கட்சிகள் (வடக்கு) அவதானம் செலுத்திவருகின்றன. இக்கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படுமா…” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மலையகத்தல் உள்ள தமிழ்க் கட்சிகள் எம்முடன் இணக்கத்துக்கு வந்துள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. கூட்டணி அமைத்தே நாம் களம் இங்குவோம். அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைத்துக்கொள்ளப்படும்.” எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
