வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் பலி!

புத்தளம், உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரி ழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பு, 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வாயதுடைய முத்துச்செல்வம் தனுஜன் எனும் இளைஞனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண் டிருந்த இளைஞன் மீது சுவரின் ஒரு பகுதி திடீரென வீழ்ந்துள் ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

எனினும், மேற்படி இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் அந்த இளைஞன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles