பசறை, மீதும்பிபிட்டி பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆட்டோ பசறை கமெவெல பகுதியில் இருந்து மீதும்பிபிட்டி தேயிலை தொழிற்சாலைக்கு சென்றதாகவும் அதில் 3 பெண்கள் , இரு ஆண்கள் மற்றும் சாரதி என மொத்தமாக ஐவர் இருந்ததாகவும் ஐவரும் பலத்த காயமடைந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பசறை கமெவெல பகுதியை சேர்ந்த 21,42,39,34,36 வயதுடையவர்களே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்










