ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பவற்றின் சங்கமம் சாத்தியப்படாததொன்றாகும் – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
துரோகிகளுடன் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜே.பி.வி. மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பவற்றின் இணைவுக்கான சாத்தியம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படும் எனக் கூறப்படுவது பொய்யாகும். அவ்வாறு செய்யப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.