ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது.
18 கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ள இக்கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது எனவும், எதிர்வரும் 20 ஆம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறும் எனவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு, லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் 20 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது.
அடுத்த தேர்தலை இலக்குவைத்தே இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
“எனக்கு ஜனாதிபதி என்ற பதவி ஆசை இல்லை. எனினும், கூட்டணியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்தால் சவாலை ஏற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
