நுவரெலியாவில் வீட்டை உடைத்து உள்நுழைந்தவர் கைது!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் இரண்டாவது ஒழுங்கை பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (19) வீடொன்றை உடைத்து உள்நுழைந்த சந்தேக நபர் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று புதன்கிழமை (20) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வீட்டின் பின்புற நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து வீட்டில் எந்தவிதமான பொருள்களையும் எடுத்துச் செல்லாமல் மீண்டும் அதே நுழைவாயில் ஊடாக வெளியேறும் காட்சி குறித்த வீட்டில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் நுவரெலியாவில் வேறு ஏதேனும் பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

நானுஓயா நிருபர்

 

Related Articles

Latest Articles