சஜித் தலைமையில் ‘மெகா’ கூட்டணி 05 ஆம் திகதி உதயம்!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் 05 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளன. அன்றைய தினம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.
இக்கூட்டணி உதயமான பின்னர், அக்கூட்டணி ஊடாகவே ஐக்கிய மக்கள் சக்தி மே தினத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது

Related Articles

Latest Articles