கோர விபத்தில் ஆசிரியை பலி: மூவர் படுகாயம்!

எம்பிலிபிட்டிய, நோநாகம வீதியில் பெமினியன்வில பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மாத்தறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தக பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியை ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.ஏனைய மூவரும் பாரிய காயங்களுடன் அம்பாந்தோட்டை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய்,தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் திருகோணமலையில் இருந்து ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles