போராட்டத்தை விமர்சித்த சஜித் கட்சி அமைப்பாளரை வறுத்தெடுக்கிறது இதொகா

பசறையில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசு மருந்து அடித்து கொசுக்களை விரட்ட வேண்டும் என இ.தொ.காவின் பசறை தொகுதி அமைப்பாளர் வேலு ரவி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இ.தொ.கா செய்த போராட்டம் சுற்றுலா பயணிகளை மட்டுமே ஈர்த்துள்ளது என கருத்து தெரிவித்த லெட்சுமணன் சஞ்சய் அவர்களே இந்த கருத்தை நீங்கள் முதலில் உங்களுடைய கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு கூற வேண்டும்.

ஏனெனில் தொட்டது தொண்ணூறுக்கும் உங்கள் கட்சி தான் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் செய்து வருகின்றது. உங்களுடைய இந்த அறிக்கை இ.தொ.காவிற்கா அல்லது உங்கள் கட்சி தலைவர் சஜித்திற்கா?

மேலும் லெட்சுமணன் சஞ்சய் , இ.தொ.கா போராட்டம் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்ததாகவும், அது வினோதமாக இருந்ததென்று சுற்றுலா பயணிகள் கூறியதாக கூறுகின்றீர்களே! அவ்வளவு பெரிய போராட்டத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் இணைந்து மாறுவேடத்தில் வந்து வேவுபார்த்துள்ளீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதனூடாக தாங்களின் புலனாய்வு திறனை கண்டு வியப்படைகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஒரு பிரதேச சபை தேர்தலில் கூட போட்டியிடாத லெட்சுமனன் சஞ்சய், கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 40000 வாக்குகளை பெற்ற இ.தொ.காவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது. லெட்சுமனன் சஞ்சய் , முதலில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுங்கள், பிறகு வியாக்கியானம் பேசுங்கள்.

பதுளை மக்கள் எங்களை நிராகரித்துள்ளனர் என கூறும் லெட்சுமணன் சஞ்சய் , கடந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை முழு இலங்கை மக்களும் நிராகரித்து உள்ளனர்.
இ.தொ.காவிற்கு பதுளை மக்கள் வாக்களிப்பர்களா இல்லையா என்பதை பதுளை மக்கள் கூறட்டும். உங்களை போல் மட்டக்குளி மோதரையை சேர்ந்தவர்கள், பதுளை மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை பற்றி கருத்து தெரிவிக்க எவ்வித அவசியம் கிடையாது.

மேலும் எங்கள் கட்சி தலைவர், நீங்கள் கூறிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாமல் இருந்த போதிலும் தனி ஒரு தமிழனாக ஆளும் கட்சி பட்டியலில் 40000 வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லாத போதிலும் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவேன் என கூறிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

ஆனால் உங்களுடைய கட்சி தலைவர் தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 பெற்று தருவதாக அன்று கூறி 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இன்று வரை பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் எங்களுடைய தலைவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி மக்கள் தலைவன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை கொடுத்து கொண்டிருக்கின்றனர். அதை கண்டு தாங்கள் இன்று வழங்கிய அறிக்கையை பார்க்கும் பொழுது, என் மனதில் திரைபட நடிகர் வடிவேல் நானும் ரவுடி தான் என்னையும் கூட்டிட்டு போங்க என பொலிஸாரிடம் வாக்குவாதம் செய்யும் வடிவேலின் நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles