ராஜபக்சக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல்களால் எமது கட்சிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அக்கட்சியினர்தான் எம்மை நம்பி உள்ளனர். நாம் அவர்களை நம்பி அல்லர்.
சந்திரிக்கா அம்மையார் ஒவ்வொறு காலத்திலும் ஒவ்வொரு அறிவிப்புகளையும் விடுத்துவருகின்றார். மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் சாய வைத்து பொதுவேட்பாளராக அவரே களமிறக்கினார். ஆனால் இன்று மாறுபட்ட கருத்தை வெளியிடுகின்றார்.
ஆகவே, ராஜபக்சக்கள் தொடர்பிலும் அவர் வெளியிடும் கருத்துகள் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” – என்றார்.










