ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனை பொறுப்பேற்பதற்கு தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ சந்திரிக்கா அம்மையார் நீண்டகாலம் அரசியல் செய்தவர். எனவே, சுதந்திரக்கட்சியில் அவர் போஷகர் என்ற பதவி நிலையில் இருக்க வேண்டும். அந்த பதவியில் இருந்து தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.
மைத்திரிபால சிறிசேன பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். அவற்றி பற்றி கருத்து வெளியிட்டு எனது நேரத்தை வீணடிக்க தயாரில்லை.” – எனவும் பொன்சேகா கூறினார்.
அதேவேளை, மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் செல்வதற்கு நான் தயாரில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் களனி அமைப்பாளர் என்ற வகையில் அக்கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்பேன் எனவும் அவர் கூறினார்.










