அடுத்து என்ன? ரணில் – பஸில் நாளை மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பொன்று நாளை 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பின்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி முடிவெடுக்கப்படும் என தெரியவருகின்றது.

இதற்கு முன்னரும் பஸில், ரணிலுக்கிடையில் இரு சந்திப்புகள் நடைபெற்றன. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெறும் பஸிலின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேபோல அடுத்த தேர்தல்களை கூட்டணியாக எதிர்கொள்வது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இவ்வாறானதொ பின்புலத்திலேயே முக்கியமான சில முடிவுகளை எடுக்கும் நோக்கில் மூன்றாம் கட்ட சந்திப்பு இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles