பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி: ஒருவர் தப்பியோட்டம்

ஹெரணை பாதுக்க – மொரகஹாஹேன பகுதியில் பொலிஸ் கட்டளையைமீறி பயணித்த ஆட்டோமீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.50 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆட்டோவை நிறுத்துவதற்கு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், ஆட்டோவில் இருந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டாலும், துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டுள்ளதால் பொலிஸார் பதில் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தப்பியோடியுள்ளார்.

Related Articles

Latest Articles