வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித் தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவரது, வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
மதவாச்சிப் பகுதியை சேர்ந்த நிறை மாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்றை தினம் விடுதியில் உள்ள குளியலறைக்குச் சென்ற நிலையில் தவறி வீழ்ந்துள்ளார் எனத் தெரிவிக் கப்படுகின்றது.
இதனால் அவர் மரண மடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சை யினை வைத்தியர்கள் மேற்கொண்டுள் ளனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த வர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத் தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
