“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன். நான் கை வைத்த விடயங்களில் தோல்வியில் முடிந்தது கிடையாது.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். கட்சியில் உறுப்புரிமை இருப்பதால்தான் பதில் தலைவராகியுள்ளேன். கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன். நான் கை வைத்த காரியங்கள் தோல்வியில் முடிந்தது கிடையாது.
தற்போதைய அரசில் பல கட்சிகள் உள்ளன. எனவே, சுதந்திரக்கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. புதிய பதவியை ஏற்றுள்ளதால் அமைச்சு பதவி பறிபோகும் என நம்பவில்லை.” – என்றார்.










