அடுத்த பொதுத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே பெறும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான எதிரணி பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கிராமிய மட்டத்தில் சஜித்துக்கு ஆதரவு அலை வீசுகின்றது. தம்மை அவர் பார்த்துக்கொள்வார் என உறுதியாக நம்புகின்றனர். எனவே, உள்நாட்டில் சஜித்தின் வெற்றி உறுதியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி எமக்கு சவாலாக அமையாது. ஆனாலும் மொட்டு கட்சியினரைவிட கூடுதல் வாக்குகளைப் பெறுவார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குரிய வாக்கு வங்கியில் ஒரு பகுதி எமக்கும் வரும்.
அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை தேசிய மக்கள் சக்தியே பெறும் என நம்புகின்றேன்.” – என்றார்.










