ரூ. 1700 கிடைக்குமா? சம்பள நிர்ணயசபை நாளை கூடுகிறது

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சம்பள நிர்ணய சபை நாளை (24) கூடவுள்ளது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை கூடியபோதும் முதலாளிமார் சம்மேளனமும், தோட்ட சேவையாளர் சங்கமும் அதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையிலேயே 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு சம்பள நிர்ணய சபை இன்று கூடுகின்றது.

Related Articles

Latest Articles