வன்முறை அரசியல்மூலம் மலையகத்தை சீர்குலைக்க வேண்டாம்!

கருத்தியல் ரீதியான மோதல்களுக்கு தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த முயற்சிப்பது நாகரிகமான அரசியல் செயற்பாடாக இருக்காது. அந்த வகையில் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் சமூகத்தை தலைகுனியச் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது அறிக்கையில்,

அரசியல் ரீதியில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமான விடயமாகும். கண்டனங்களையும் விமர்சனங்களையும் அந்தந்த வழியிலேயே எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து தாக்குதல் முயற்சிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. சம்பள உயர்வு தொடர்பான விடயத்தில் சகலரது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அடாவடித் தனங்களால் எதையும் சாதிக்க முடியாது: மக்களின் வெறுப்புக்குத்தான் ஆளாக வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மலையகத்தில் ஒரு காலத்தில் அடிதடி, பழிக்குப் பழி, என்று மக்களைத் தூண்டி விட்டு தொழிற்சங்கம் மற்றும் அரசியல் நடத்திய வன்முறை கலாசாரம் இருந்து வந்தது. அரசியல் ரீதியில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருந்து வந்தது. ஆனால், இன்று அந்தக் கலாசாரம் மலையேறி விட்டது. கடந்த சில வருடங்களாக எந்த விதமான குரோதங்களும் இல்லாமல் சுமுகமான நிலை காணப்படுகின்றது. தொழிலாளர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்ற வழக்குகள் வருடக் கணக்கில் நிலுவையில் கிடப்பதால் அப்பாவி மக்கள் நிம்மதியின்றி இன்றும் அலைந்து திரிந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

அதேபோல், மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு செல்ல சிலர் அராஜக அரசியலை கட்டவிழ்த்து விட்டு குளிர்காய நினைக்கின்றார்கள். பிரச்சினைகளுக்கு வன்முறைகள் தான் தீர்வாக அமையும் என்று நினைக்கக் கூடாது. ஒருவர் அடிக்கும் போது மற்றவரும் திருப்பி அடித்தால் நிலைமை மோசமாகி விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நீண்ட காலமாக நிலவி வந்த அரசியல் போட்டா போட்டிகள் மாறி மலையகம் அமைதியாக இருக்கின்ற நேரத்தில் மீண்டும் மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்கி குழப்பங்களை ஏற்படுத்தவும், ஒற்றுமையை சிதறடித்து, அமைதியை சீர்குலைக்கவும் சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இத்தகைய வன்முறைகள் மேலும் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது. மலையகத் தலைமைகள் தமது அங்கத்தவர்களை கட்டுப்பாடாக வைத்து கடமை கண்ணியத்தைப் பேணி நிதானமாக செயற்படுவதற்கு அக்கறை காட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles