மே மாதத்துக்குள் இரு விவாதங்களுக்கும் தயார் – சஜித் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவுடன் விவாதம் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு முதுகெலும்பில்லையா? நாம் எதற்கும் அஞ்சவில்லை. இரு விவாதங்களையும் மே மாதத்துக்குள் நடத்துவதற்கு தயார் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவருக்குமிடையிலான விவாதத்துக்குரிய திகதிகளை தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ளது.

இந்நிலையிலேயே மே மாதத்துக்குள் விவாதத்துக்கு தான் தயார் எனவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்குழுவுடனும் தேசிய மக்கள் சக்தி விவாதிக்க வேண்டும் எனவும் சஜித் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“பொருளாதாரம் தொடர்பில் தமது கட்சியின் பொருளாதாரக்குழுவுடன் விவாதத்துக்கு வருமாறு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சவால் விடுத்திருந்தார்.
இந்த சவாலை ஏற்காது அதில் இருந்து தப்பும் வகையில் இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் விவாதம் நடத்தலாம் என தேசிய மக்கள் சக்தி கூறியது. தற்போது திகதியும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நாம் விவாதத்துக்கு தயார். தலைவருடனான விவாதத்துக்கு மட்டுமல்ல பொருளாதாரக்குழுவுடனான விவாதத்துக்கும் தயார். மே மாதத்துக்குள் இரு விவாதங்களையும் நடத்தலாம்.

ஓடி ஒளியாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்குழுவுடனும் விவாதத்துக்கு வர வேண்டும்.”

– என்றார் சஜித்.

Related Articles

Latest Articles